முகப்புடோலிவுட்

ப்ரியதர்ஷன் மகளின் இரண்டாவது தெலுங்குப் படம்

  | February 10, 2018 12:44 IST
Sudheer Varma

துனுக்குகள்

  • இதில் ஷர்வானந்துக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் – நடிகை லிஸ்ஸியின் மகள் கல்யாணி
  • ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளனர்
தெலுங்கில் ‘கேசவா’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுதீர் வர்மா இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் நடிக்கவுள்ளார். இதில் ஷர்வானந்துக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம். தற்போது, பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் – நடிகை லிஸ்ஸியின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இதை இயக்குநர் சுதீர் வர்மாவே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இன்னொரு நாயகியின் தேர்வு நடந்து வருகிறதாம். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கவுள்ள இதற்கு திவாகர் மணி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெறுகிறது. ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் டைட்டில், நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்