விளம்பரம்
முகப்புடோலிவுட்

விஜய் படத்தின் ரீமேக்கில் கன்னட நடிகர் யாஷ்

  | September 13, 2017 15:20 IST
Vijay Devarakonda

துனுக்குகள்

  • ‘அர்ஜுன் ரெட்டி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்
  • இப்படத்தை தமிழ் & ஹிந்தியில் ரீமேக்க பேச்சு வார்த்தை நடக்கிறது
டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடியிருந்தார். ரதன் இசையமைத்திருந்த இதற்கு தோடா ராஜு ஒளிப்பதிவு செய்திருந்தார். ‘பத்ரகாளி பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. திரையுலக பிரபலங்களும் படத்தை பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர். இந்த படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் - நடிகர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் கன்னட ரீமேக் உரிமையை ‘ராக்லைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் கைப்பற்றியுள்ளார். இதில் விஜய் தேவரகொண்டா ரோலில் கன்னட நடிகர் யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்