முகப்புடோலிவுட்

ராஜமௌலி படத்தில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

  | May 15, 2018 11:30 IST
Ss Rajamouli Next Film

துனுக்குகள்

  • `மகாநடி' படத்துக்காக பாராட்டுகளைப் பெற்றுவருகிறார் கீர்த்தி சுரேஷ்
  • இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார்
  • இதில் சாவித்ரியாக நடித்திருந்தார் கீர்த்தி
நடிகை சாவித்ரியின் பயோபிக்காக தெலுங்கில் உருவானது `மகாநடி'. இது தமிழில் `நடிகையர் திலகம்' என டப் செய்யப்பட்டு வெளியானது. சாவித்ரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

கமல்ஹாசன், விஜய், மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் எனப் பலரும் கீர்த்தியின் நடிப்பைப் புகழ்ந்தார்கள். கூடவே பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் " சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அவரை போல நடித்ததோடு, சாவித்ரியை இயல்பு வாழ்க்கைக்குள்ளே அழைத்து வந்திருந்தார்" எனப் புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார்.

தற்போது ராஜமௌலி ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் `RRR' படத்தை இயக்குகிறார். கீர்த்தியின் நடிப்பை ராஜமௌலி புகழ்ந்ததால், இந்தப் படத்தில் கீர்த்தி நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது எனக் கிசுகிசுக்கிறது ஆந்திர மீடியாக்கள். படத்தின் ஹீரோயின் இன்னும் அறிவிக்கப்படாததால், ஒருவேளை இது நிஜமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றிய எந்த செய்தியையும் படக்குழு தெரிவிக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் துவங்க இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்