முகப்புடோலிவுட்

பிரபாஸ் படத்துக்காக ஹிந்தி கற்கும் அருண் விஜய்

  | September 29, 2018 11:57 IST
Arun Vijay

துனுக்குகள்

  • இது பிரபாஸின் கேரியரில் 19-வது படமாம்
  • இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகி வருகிற
  • இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதனையடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகி வரும் இப்படம் பிரபாஸின் கேரியரில் 19-வது படமாம். இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் ரொமான்டிக் த்ரில்லரான இதில் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், ‘கத்தி’ புகழ் நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால் ஆகியோர் நடிக்கிறார்களாம். ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வம்சி – பிரமோத் இருவரும் இணைந்து ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்து வரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் மிரட்டலான மாஸ் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்தப் படம் பற்றி அருண் விஜய் என்.டி.டிவி தமிழ் சினிமாவுக்கு அளித்ததை பேட்டியில், "எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. ஆனால், இதற்காக மிகவும் சிரமப்பட்டு படத்தின் வசனங்களை எப்படிப் பேசுவது எனக் கற்றுக் கொண்டு பேசினேன். ஷூட்டிங்கின் போது மந்த்ரா பேடிகூட, "உங்களுக்கு இந்தி தெரியும்தானே?" எனக் கேட்டார். "இல்ல மேம் இப்போதான் கத்துகிட்டு பேசிட்டிருக்கேன்" எனக் கூறினேன். எனது குழுவுக்கு இதற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன் எனக் கூறினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்