முகப்புடோலிவுட்

2019 ஏப்ரலில் வெளியாகும் 'மகேஷ் 25'

  | July 11, 2018 12:34 IST
Mahesh Babu 25

துனுக்குகள்

  • இது மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம்
  • இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் டேராடூனில் பரபரப்பாக நடைபெற்று வந்தது
டோலிவுட்டில் கொரட்டால சிவாவின் ‘பரத் அனே நேனு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷ் பாபு, ‘தோழா’ புகழ் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடத்தில் அல்லரி நரேஷ் நடிக்கிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் ஷூட்டிங் டேராடூனில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்