முகப்புடோலிவுட்

குடும்பத்துடன் கோவாவில் எளிமையாக பிறந்தநாளைக் கொண்டாடிய மகேஷ்பாபு

  | August 09, 2018 22:37 IST (New Delhi)
Mahesh Babu

Mahesh Babu with Namrata Shirodkar, Gautam and Sitara. (Image courtesy: YouTube)

துனுக்குகள்

  • தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு
  • இன்று அவரது 43வது பிறந்தநாள்
  • அவரின் 'மஹர்ஷி' பட போஸ்ட்ர் வெளியானது

தெலுங்கில் தனக்கென பெரும் ரசிகர் வட்டம் கொண்டவர் மகேஷ்பாபு. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவருக்கு இன்று 43வது பிறந்தநாள். அதை முன்னிட்டு தனது 25வது படமான 'மஹர்ஷி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

 

 

 

Embarking on my new journey as RISHI. #MAHARSHI

A post shared by Mahesh Babu (@urstrulymahesh) on

 

Meanwhile, Mahesh Babu's wife Namrata Shirodkar has been actively promoting the film on social media.

 

எப்போதும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவதில் மகேஷ் பாபு ஸ்பெஷலிஸ்ட். இந்த பிறந்த நாளையும் எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் எளிமையாக தனது குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார். கோவாவில் தனது குடும்பத்தினருடன் இருந்தவர் "கோவாவில் பிறந்தநாள் கொண்டாட பெரிய காரணம் எதுவும் கிடையாது. எனது மஹர்ஷி பட வேலைகளுக்கு நடுவே குடும்பத்துடன் இருக்க விரும்பினேன்" என்றார். 

"எனது ரசிகர்கள் தான் என்னுடைய எல்லா பிறந்தநாளையும் ஸ்பெஷல் ஆக்குகிறார்கள். சிலநேரம் வாழ்த்துகள்  அளவு கடந்து வெளிப்படும் என்பதால், பல பிறந்தநாள்களை வெளிநாட்டில் தான் கவனித்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை 'மஹர்ஷி' பட வேலைகள் இருப்பதால் செல்லவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்