முகப்புடோலிவுட்

106 வயது ரசிகையை சந்தித்த மகேஷ் பாபு – வைரலாகும் புகைப்படம்

  | November 27, 2018 11:59 IST
Mahesh Babu

துனுக்குகள்

  • ‘பரத் அனே நேனு’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு, ‘மகர்ஷி’ படத்தில் நடித்து வர
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • மகேஷ் பாபுவின் தீவிர ரசிகை ரேலங்கி சத்யவதி என்ற 106 வயதான பாட்டி
டோலிவுட்டில் கொரட்டால சிவாவின் ‘பரத் அனே நேனு' படத்திற்கு பிறகு நடிகர் மகேஷ் பாபு, ‘மகர்ஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தோழா' புகழ் வம்சி இயக்குகிறார். இது மகேஷ் பாபுவின் கேரியரில் 25-வது படமாம். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடி வருகிறார்.

மேலும், முக்கிய வேடத்தில் அல்லரி நரேஷ் நடிக்கிறார். இதற்கு ‘ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் - வைஜெயந்தி மூவீஸ் – PVP சினிமா' நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸாகுமாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகேஷ் பாபுவின் தீவிர ரசிகையான ரேலங்கி சத்யவதி என்ற 106 வயதான பாட்டியின் நீண்ட நாள் ஆசை, அவரை நேரில் சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதை தெரிந்து கொண்ட மகேஷ் பாபு, ‘மகர்ஷி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சத்யவதி பாட்டியை அழைத்து பேசியுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்