முகப்புடோலிவுட்

கோலிவுட்டில் முதலமைச்சராக களமிறங்கும் மகேஷ் பாபு

  | May 11, 2018 11:39 IST
Mahesh Babu Bharat Ane Nenu

துனுக்குகள்

  • மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார்
  • இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வந்தார்
  • பாக்ஸ் ஆஃபீஸிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்த வண்ணமுள்ளது
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் ‘பரத் அனே நேனு’. இயக்குநர் கொரட்டால சிவா இயக்கியிருந்த இதில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார்.

பொலிட்டிக்கல் த்ரில்லரான இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வந்தார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இதற்கு ரவி.கே.சந்திரன் - திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்த வண்ணமுள்ளது. இந்நிலையில், படத்தை தமிழில் ‘பரத் எனும் நான்’ என்ற பெயரில் டப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் தமிழ் வெர்ஷனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்