விளம்பரம்
முகப்புடோலிவுட்

மகேஷ் பாபு முதலமைச்சராக நடித்துள்ள ‘பாரத் அனே நேனு’ டிரெய்லர்

  | April 09, 2018 11:14 IST
Bharat Ane Nenu

துனுக்குகள்

  • மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை ஏப்ரல் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு கால்ஷீட் டைரியில் கொரட்டால சிவாவின் ‘பாரத் அனே நேனு’ மற்றும் வம்சி இயக்கவுள்ள புதிய படம் என 2 படங்கள் இருக்கிறது. இதில் ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இது மகேஷ் பாபுவின் கேரியரில் 24-வது படமாம். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வரவுள்ளாராம். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரவி.கே.சந்திரன் - திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் & மகேஷ் பாபு ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு மொழியில் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் ஆடியோ பதிவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்