முகப்புடோலிவுட்

மகேஷ் பாபுவின் ‘பாரத் அனே நேனு’ ரிலீஸில் மாற்றம்

  | February 14, 2018 13:53 IST
Mahesh Babu Next Film

துனுக்குகள்

  • இதில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வரவுள்ளாராம்
  • மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 27-ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளனர்
ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபு கால்ஷீட் டைரியில் கொரட்டால சிவாவின் ‘பாரத் அனே நேனு’, எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் வம்சி இயக்கவுள்ள புதிய படங்கள் என அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. இதில் ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா அத்வானி டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இது மகேஷ் பாபுவின் கேரியரில் 24-வது படமாம். பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபு முதலமைச்சராக வலம் வரவுள்ளாராம். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரவி.கே.சந்திரன் - திரு ஒளிப்பதிவு செய்கின்றனர், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 27-ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் & மகேஷ் பாபு ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு மொழியில் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் ஆடியோ பதிவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, அட்வான்ஸாக ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 26-ஆம் தேதியே இப்படம் ரிலீஸாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்