முகப்புடோலிவுட்

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆராக மம்மூட்டி - ‘யாத்ரா’ டீசர்

  | July 09, 2018 13:48 IST
Yatra Movie

துனுக்குகள்

  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்மூட்டி நடிக்கிறார்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
டோலிவுட்டில் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது. ‘யாத்ரா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் மகி.வி.ராகவ் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தை ‘70mm எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கே இசையமைத்து வரும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்