முகப்புடோலிவுட்

மகேஷ் பாபு டிவிட்டிய ‘MANASUKU NACHINDI’ டிரையிலர்

  | January 09, 2018 16:07 IST
Manasuku Nachindi Movie Trailer

துனுக்குகள்

  • இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் மஞ்சுளா
  • சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக டபுள் ஹீரோயின்ஸாம்
  • இதன் டீஸர் மற்றும் 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ (தெலுங்கில் C/O சூர்யா) படத்திற்கு பிறகு சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் ‘MANASUKU NACHINDI’. பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தங்கையும், தயாரிப்பாளருமான மஞ்சுளா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். இதில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர், திரிதா சௌத்ரி என டபுள் ஹீரோயின்ஸாம்.

ரதன் இசையமைத்து வரும் இதற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் – இந்திரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட டீஸர் மற்றும் 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் டிரையிலரை மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்