முகப்புடோலிவுட்

டாக்டர் நானி, டான் நாகர்ஜுனா - ‘தேவதாஸ்’ படத்தின் டீசர்

  | August 24, 2018 18:04 IST
Devdas Film

துனுக்குகள்

  • நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘தேவதாஸ்
  • இதில் நானி டாக்டராக வலம் வரவுள்ளாராம்
  • நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ஆகங்க்ஷா சிங் நடித்து வருகிறார்

டோலிவுட்டில் பிரபல நடிகர்களான நாகர்ஜுனா, நானி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘தேவதாஸ்’ (Devadas). இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி வருகிறார். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நாகர்ஜுனா டானாகவும், நானி டாக்டராகவும் நடிக்கின்றனர்.

நானிக்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனாவும், நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக ஆகங்க்ஷா சிங்கும் நடிக்கிறார்கள். இதற்கு மணிஷர்மா இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 


தற்போது, படத்தின் டீசரை நானி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்