முகப்புடோலிவுட்

அப்பா பாடலை ரீமிக்ஸ் செய்த மகன்

  | April 13, 2018 12:05 IST
Nagarjuna

துனுக்குகள்

  • நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்
  • இதில் மிக முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
டோலிவுட்டில் கிருஷ்ணா.RV.மாரிமுத்துவின் ‘யுத்தம் சரணம்’ படத்திற்கு பிறகு நடிகர் நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘SAVYASACHI’. ‘ப்ரேமம்’ இயக்குநர் CHANDOO MONDETI இயக்கும் இதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக ‘முன்னா மைக்கேல்’ ஹிந்தி பட புகழ் நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மிக முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, நாகர்ஜுனாவின் ‘அல்லரி அல்லுடு’ படத்தில் இடம்பெற்ற ‘நின்னு ரோடு மீதா சூசிநாதி லகாயது’ என்ற பாடலை இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அல்லரி அல்லுடு’ படத்திற்கும் இசையமைத்தது எம்.எம்.கீரவாணி என்பது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் ‘SAVYASACHI’-யின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்