முகப்புடோலிவுட்

நாகர்ஜுனா – RGV கூட்டணியில் 'ஆஃபீசர்' படத்தின் டிரெய்லர்

  | May 12, 2018 12:14 IST
Officer Movie Trailer

துனுக்குகள்

  • இதில் நாகர்ஜுனா போலீஸாக வலம் வரவுள்ளாராம்
  • இதன் 2 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை வருகிற மே 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
டோலிவுட்டில் ‘ராஜூ காரி கதி 2’ படத்திற்கு பிறகு நாகர்ஜுனா, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘ஆஃபீசர்’ படத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே, நாகர்ஜுனா – ராம் கோபால் வர்மா காம்போவில் வெளியான மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தை ராம் கோபால் வர்மாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘RGV கம்பெனி’ மூலம் தயாரிக்கிறார். இதில் நாகர்ஜுனா போலீஸாக வலம் வரவுள்ளாராம். ஹீரோயினாக அறிமுக நடிகை மைரா சரீன் நடித்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் 2 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, ராம் கோபால் வர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற மே 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்