முகப்புடோலிவுட்

நானி டபுள் ஆக்ஷனில் அசத்தும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ டீசர்

  | March 10, 2018 11:54 IST
Krishnarjuna Yuddham Teaser

துனுக்குகள்

  • இதில் நானி இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்
  • இப்படத்தை ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  • இன்று இதன் டீசரை நானி ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்
வேணு ஸ்ரீராமின் ‘MCA’ (மிடில் கிளாஸ் அப்பாயி) படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்து வரும் படம் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’. மெர்லபாக காந்தி (MERLAPAKA GANDHI) இயக்கி வரும் இதில் நானி இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

நானிக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் அனுப்பமா பரமேஸ்வரன், ருக்ஷர் மிர் என டபுள் ஹீரோயின்ஸாம். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘ஷைன் ஸ்க்ரீன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, நானி தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்