முகப்புடோலிவுட்

தள்ளிப்போகிறது ஆர்யா நடித்திருக்கும் கன்னடப் படம்

  | February 08, 2018 16:24 IST
Anup Bhandari

துனுக்குகள்

  • இதில் ஹீரோவாக நிருப் பண்டாரி நடித்துள்ளார்
  • இப்படத்தில், பஸ்ஸுக்கு ராணாவும், புனீத்தும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர்
  • முதலில் படத்தை பிப்ரவரி 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்
கன்னடத்தில் ‘ரங்கிதரங்கா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜரதா’. இதில் ஹீரோவாக நிருப் பண்டாரி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அவந்திகா ஷெட்டி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ரவி ஷங்கர், ஆர்யா நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு (ராஜரதம்) என 2 மொழிகளில் பைலிங்குவலாக தயாராகியுள்ள இப்படத்தில் வரும் பஸ்ஸுக்கு ராணா டகுபதியும் (தெலுங்கு வெர்ஷன்), புனீத் ராஜ்குமாரும் (கன்னட வெர்ஷன்) வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனராம்.

இயக்குநர் அனுப் பண்டாரியே இசையமைத்துள்ள இதற்கு அஜநீஷ் லோக்நாத் பின்னணி இசையமைத்துள்ளார், வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜாலிஹிட்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரையிலர் மற்றும் 2 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. முதலில் இப்படத்தை வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி 2 மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, சில காரணங்களால் படத்தின் ரிலீஸை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதை நிருப் பண்டாரியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, புதிய போஸ்டரையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்