முகப்புடோலிவுட்

நித்தினின் 25-வது படமான ‘சல் மோகன்ரங்கா’ டீஸர்

  | February 14, 2018 10:14 IST
Chal Mohan Ranga Movie Teaser

துனுக்குகள்

  • இதில் நித்தினுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இது நித்தினின் கேரியரில் 25-வது படமாம்
  • இப்படத்தை வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
தெலுங்கில் ஹனு ராகவபுடியின் ‘லை’ படத்திற்கு பிறகு நித்தின் நடிக்கும் படம் ‘சல் மோகன்ரங்கா’ (Chal Mohanranga). கிருஷ்ணா சைத்தன்யா என்பவர் இயக்கி வரும் இதில் நித்தினுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் டூயட் பாடி ஆடி வருகிறார். இது நித்தினின் கேரியரில் 25-வது படமாம். மேலும், முக்கிய வேடங்களில் ராவ் ரமேஷ், நரேஷ், பிரகதி, ஸ்ரீனிவாச ரெட்டி, சஞ்சய் ஸ்வரூப், மது ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைத்து வரும் இதற்கு நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார். நடிகர் பவன் கல்யாண் – இயக்குநர் த்ரிவிக்ரமுடன் இணைந்து நித்தினே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

தற்போது, படத்தின் டீஸரை இன்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்