முகப்புடோலிவுட்

டோலிவுட் என்ட்ரிக்கு தேதி குறித்த நிவேதா பெத்துராஜ்

  | November 13, 2017 14:36 IST
Nivetha Pethuraj

துனுக்குகள்

  • ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்
  • நிவேதா கைவசம் மூன்று படங்கள் உள்ளது
  • டோலிவுட்டில் நிவேதா என்ட்ரியாகும் முதல் படம் ‘மெண்டல் மதிலோ’
கோலிவுட்டில் ‘அட்டகத்தி’ தினேஷின் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து நிவேதா நடித்து சமீபத்தில் வெளியான படம் உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. தற்போது, தமிழில் நிவேதா கைவசம் ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ மற்றும் தெலுங்கில் விவேக் ஆத்ரேயாவின் ‘மெண்டல் மதிலோ’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது.

இதில் நிவேதா பெத்துராஜ் டோலிவுட்டில் என்ட்ரியாகும் ‘மெண்டல் மதிலோ’ (MENTAL MADHILO) படத்தில் ஹீரோவாக ஸ்ரீவிஷ்ணு என்பவர் நடித்துள்ளார். பிரஷாந்த் விஹாரி இசையமைத்துள்ள இதற்கு வேதா ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தர்மாபாத் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட டிரையிலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடத்தவும், படத்தை நவம்பர் 24-ஆம் தேதி வெளியிடவும் ‘மெண்டல் மதிலோ’ டீம் திட்டமிட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்