விளம்பரம்
முகப்புடோலிவுட்

துவங்கியது என்.டி.ஆரின் பயோ பிக் ஷூட்டிங்

  | July 06, 2018 14:34 IST
Ntr Biopic

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார்
  • சமீபத்தில், தேஜாவுக்கு பதிலாக க்ரிஷ் இயக்குநராக ஒப்பந்தமானார்
  • இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம்
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். முதலில் படத்தை இயக்க கமிட்டான இயக்குநர் தேஜாவிற்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தேஜாவுக்கு பதிலாக க்ரிஷ் இயக்குநராக ஒப்பந்தமானார்.

பாலகிருஷ்ணாவின் 100-வது படமான ‘கௌதமிபுத்ர சாதர்கணி’யை இயக்கியது க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார்.

இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம்.
 
இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். தற்போது, இதன் ஷூட்டிங் நேற்று (ஜூலை 5-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் க்ரிஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்