விளம்பரம்
முகப்புடோலிவுட்

தயாரிப்பு தரப்பில் கால் பதிக்கும் தெலுகு சூப்பர் ஸ்டார்

  | October 10, 2017 16:38 IST
Ntr

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா ‘லட்சுமியின் என்.டி.ஆர்.’ என்ற படத்தில் நடித்து வருகிறார்
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடபட்டது
  • பிரம்மா தேஜா புரடெக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்
தெலுகு நடிகர் பாலகிருஷ்ணா தற்போது இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்.’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுகு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய என்.டி.ராமாராவின் இரண்டாவது மகன், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை கதையாக கொண்ட இப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பை நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனுடன் இணைந்து, இது தனது தந்தையின் வரலாற்று திரைப்படம் என்பதால் அப்படத்தை தானே தயாரிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். அப்பணிக்காக தன்னுடைய மகன்பிராமினி மற்றும் தனது மகள் தேஜஸ்வினி ஆகியோரது பெயர்களை இனைத்து ‘பிரம்மா தேஜா புரடெக்சன்ஸ்’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்