முகப்புடோலிவுட்

காதலர் தினத்தன்று ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா கொடுக்கப்போகும் ட்ரீட்

  | January 09, 2018 12:33 IST
Idi Naa Love Story Movie Trailer

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி ஓவியா
  • இப்படத்தில் தருணுக்கு ஜோடியாக ஓவியா டூயட் பாடி ஆடியுள்ளார்
  • இதன் டிரையிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது
‘பிக் பாஸ்’ ஷோ மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி ஓவியா நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. தற்போது, ஓவியா கைவசம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’, ‘இதி நா லவ் ஸ்டோரி’ ஆகிய 3 படங்கள் உள்ளது.

இதில் ‘இதி நா லவ் ஸ்டோரி’, ஓவியா நடித்துள்ள முதல் நேரடி தெலுங்கு படமாம். இப்படத்தில் ஹீரோவாக தருண் நடித்துள்ளார். இதனை ரமேஷ் கோபி என்பவர் இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ள இதற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷங்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ராம் எண்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.வி.பிரகாஷ் தயாரித்துள்ளார்.
 

ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரையிலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரையிலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்