விளம்பரம்
முகப்புடோலிவுட்

மெகா பவர் ஸ்டாரின் படத்தில் பூஜா ஹெக்டே

  | October 04, 2017 18:05 IST
Ram Charan Next Movie

துனுக்குகள்

  • இது ராம் சரணின் 11-வது படமாம்
  • இயக்குநர் சுகுமாருடன் ராம்சரண் கைகோர்க்கும் முதல் படம்
  • ராம் சரணுக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார்
தெலுங்கில் ‘துருவா’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண், சுகுமாரின் ‘ரங்கஸ்தளம் 1985’ படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் - ராம்சரண் காம்போவில் தயாராகும் முதல் படம் என்பதால், இதன் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இது ராம் சரணின் 11-வது படமாம்.

இதில் மெகா பவர் ஸ்டாருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், மிக முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, ‘ஈரம்’ புகழ் ஆதி நடித்து வருகின்றனர். ‘ராக்ஸ்டார்’ தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட நடிகை பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2018) சங்கராந்தி (பொங்கல்) பண்டிகைக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்