முகப்புடோலிவுட்

3 மொழிகளில் உருவாகும் புதிய படத்துக்கு பூஜை போட்ட பிரபாஸ்

  | September 06, 2018 11:38 IST
Prabhas

துனுக்குகள்

  • ‘ஜில்’ பட புகழ் ராதா கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார்
  • இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
  • இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்ட படைப்பான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ மெகா ஹிட்டாகி கோடிக்கணக்கில் வசூல் மழை பொழிந்தது. தற்போது, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் டூயட் பாடி ஆடி வருகிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. இதனையடுத்து ‘ஜில்’ பட புகழ் ராதா கிருஷ்ணகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இதனை ‘கோபிகிருஷ்ணா மூவீஸ் – UV கிரியேஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் தயாராகவிருக்கும் இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.


இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6-ஆம் தேதி) படத்திற்கான பூஜை போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரபாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்