முகப்புடோலிவுட்

எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ளாரா பிரியாமணி?

  | December 03, 2018 14:51 IST
Ss Rajamauli

துனுக்குகள்

  • ராஜமௌலியின் புதிய படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இணைந்து நடிக்கின
  • இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகுகிறது
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் (2017) வெளியான படம் ‘பாகுபலி 2'. ‘ரிபெல் ஸ்டார்' பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டாகி கோடி கணக்கில் வசூல் மழை பொழிந்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் ‘யங் டைகர்' ஜூனியர் என்.டி.ஆர், ‘மெகா பவர் ஸ்டார்' ராம் சரண் இணைந்து நடிக்கின்றனர்.

ஏற்கெனவே, ராஜமௌலி – யங் டைகர் காம்போவில் ரிலீஸான 3 படங்களும், ராஜமௌலி – மெகா பவர் ஸ்டார் கூட்டணியில் வெளியான ஒரு படமும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடியாம்.

எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இதற்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்