முகப்புடோலிவுட்

தெலுங்கு படத்திற்காக ஸ்ரீதேவியாக நடிக்கிறாரா ரகுல் பரீத் சிங்?

  | August 10, 2018 10:39 IST
Ntr Biopic

துனுக்குகள்

  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்
  • இதில் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறாராம்
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். முதலில் படத்தை இயக்க கமிட்டான இயக்குநர் தேஜாவிற்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தேஜாவுக்கு பதிலாக க்ரிஷ் இயக்குநராக ஒப்பந்தமானார்.

பாலகிருஷ்ணாவின் 100-வது படமான ‘கௌதமிபுத்ர சாதர்கணி’யை இயக்கியது க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார்.

இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம். இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.
என்.டி.ஆரின் மருமகனும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறாராம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டரில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்