முகப்புடோலிவுட்

என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

  | October 06, 2018 16:51 IST
Ntr Biopic

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார்
  • இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம்
  • ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறாரா
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம். இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

என்.டி.ஆரின் மருமகனும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறாராம். இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மறைந்த நடிகைஸ்ரீதேவியின் கேரக்டரில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம். இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 9-ஆம் தேதியும், 2-ஆம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு'வை ஜனவரி 24-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்