இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம். இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 9-ஆம் தேதியும், 2-ஆம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு'வை ஜனவரி 24-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 10-ஆம் தேதி) நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.