முகப்புடோலிவுட்

5 மொழிகளில் தயாராகும் ரம்யா கிருஷ்ணனின் 'ராணி சிவகாமி'

  | August 06, 2018 14:39 IST
Ramya Krishnan

துனுக்குகள்

  • ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ ஆகஸ்ட் 31¬-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது
  • ‘பாகுபலி’யில் ‘சிவகாமி’ என்ற வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்
  • இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் தயாராகுகிறது
பிரபாஸின் ‘பாகுபலி 1 & 2’ படங்களுக்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன், அகிலின் ‘ஹலோ’ (தெலுங்கு) மற்றும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ (தமிழ்) ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். தற்போது, ரம்யா கிருஷ்ணன் நாகசைத்தன்யாவின் தெலுங்கு படமான ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’வில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மாருதி இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 31¬-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘ராணி சிவகாமி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை மது மினகனகுர்கி என்பவர் இயக்குகிறார். ‘பாகுபலி’யில் ‘சிவகாமி’ என்ற பவர்ஃபுல்லான வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீர் சமர்த் இசையமைத்து வரும் இதற்கு பால ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார், கே.எம்.பிரகாஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஷா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்