முகப்புடோலிவுட்

சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி – வைரலாகும் போஸ்டர்

  | December 14, 2018 12:27 IST
Ntr Biopic

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார்
  • இதில் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறார்
  • முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம். இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

என்.டி.ஆரின் மருமகனும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறார். இதற்கு ‘பாகுபலி' புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம்.

இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு'வை வருகிற ஜனவரி 9-ஆம் தேதியும், 2-ஆம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு'வை ஜனவரி 24-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (டிசம்பர் 14-ஆம் தேதி) நடிகர் ராணா டகுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்