முகப்புடோலிவுட்

லாவண்யாவுக்கு பதிலாக ராஷ்மிகா

  | September 06, 2017 17:27 IST
Rashmika Mandanna

துனுக்குகள்

  • விஜய் தேவரகொண்டா கைவசம் 3 படங்கள் உள்ளது
  • ‘அர்ஜுன் ரெட்டி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
  • முதலில் ஹீரோயினாக நடிக்க லாவண்யா ஒப்பந்தமானார்
டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா கைவசம் அறிமுக இயக்குநர் பாரத் கம்மா படம், ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ படப் புகழ் பரசுராமின் புதிய படம், நாக் அஷ்வினின் ‘மகாநதி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் இயக்குநர் பரசுராம் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத படத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க முதலில் லாவண்யா திரிபாதி கமிட்டானார். தற்போது, சில காரணங்களால் லாவண்யா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம். அவருக்கு பதிலாக கன்னட ‘கிரிக் பார்ட்டி’ புகழ் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக டூயட் பாடி ஆட ஒப்பந்தமாகியுள்ளாராம். இதை ராஷ்மிகாவே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
 
‘GA2 பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். படத்தின் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்