முகப்புடோலிவுட்

“மலர் டீச்சருக்கு நல்ல மனசு”- தெலுங்கு திரைப்பட உலகினர் பாராட்டு மழையில் சாய் பல்லவி

  | January 11, 2019 20:59 IST
Padi Padi Leche Manasu Movie

துனுக்குகள்

  • மாரி 2வில் தணுஷிற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
  • மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் பிரபலமானார்
  • தற்போது தமிழ் தெலுங்கு,மலையாள மொழிகளில் நடித்துவருகிறார்
தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
 
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம்  என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2வில் அராத்து ஆனந்தியாக நடித்து  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
 
சமீபத்தில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் - சாய் பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு' என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது. ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பும், வசூலும் கிட்டவில்லை.
 
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. படம் தொடங்கும் போது சாய் பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ஒரு தொகையை படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் முன்பணமாக கொடுத்து இருந்தார்.
 
மீதி தொகையை படம் ரிலீசான பிறகு தருவதாக சாய் பல்லவியிடம் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். தற்போது படம் நஷ்டமடைந்ததால் சாய் பல்லவிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கும்போது அவர் வாங்க மறுத்ததாக கூறுப்படுகிறது.  நஷ்டம் ஏற்பட்டவர்களின் சூழலை அறிந்து அவர் எடுத்த இந்த முடிவுக்கு  தெலுங்கு பட உலகினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்