முகப்புடோலிவுட்

ராம லக்ஷ்மியாக சமந்தா, 'ரங்கஸ்தலம்' கேரக்டர் டீசர்

  | February 09, 2018 13:06 IST
Rangasthalam

துனுக்குகள்

  • இயக்குநர் சுகுமாருடன் ராம்சரண் கைகோர்க்கும் முதல் படம்
  • இதில் மெகா பவர் ஸ்டாருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்
  • இன்று சமந்தா கேரக்டர் (ராமலக்ஷ்மி) டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
தெலுங்கில் ‘துருவா’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண், சுகுமாரின் ‘ரங்கஸ்தளம்’ படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் - ராம்சரண் காம்போவில் தயாராகும் முதல் படம் என்பதால், இதன் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. இது ராம் சரணின் கேரியரில் 11-வது படமாம்.

இதில் மெகா பவர் ஸ்டாருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், மிக முக்கிய வேடங்களில் ஜெகபதி பாபு, ‘ஈரம்’ புகழ் ஆதி நடித்து வருகின்றனர். ‘ராக்ஸ்டார்’ தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, சமந்தா கேரக்டர் (ராமலக்ஷ்மி) டீஸரை வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் சமந்தா ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்