முகப்புடோலிவுட்

நாகசைத்தன்யா, மாதவன் இணைந்து நடிக்கும் ‘சவ்யசாச்சி' டீசர்

  | October 01, 2018 12:06 IST
Naga Chaitanya

துனுக்குகள்

  • இதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • இப்படத்தில் முக்கிய வேடங்களில் மாதவன், பூமிகா நடிக்கின்றனர்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
டோலிவுட்டில் ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படத்துக்கு பிறகு நாகசைத்தன்யா கைவசம் சந்து இயக்கத்தில் ‘சவ்யசாச்சி'  மற்றும் சிவநிர்வனா படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘சவ்யசாச்சி' படத்தில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக ‘முன்னா மைக்கேல்’ ஹிந்தி பட புகழ் நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் மாதவன், பூமிகா நடிக்கின்றனர்.

இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 

தற்போது, நாகசைத்தன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் ஆடியோ & டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்