முகப்புடோலிவுட்

நானியுடன் மோதும் சித்தார்த்

  | December 04, 2018 16:56 IST
Siddharth

துனுக்குகள்

  • நானி கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளது
  • விக்ரம்.கே.குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் நானி நடிக்கவுள்ளார்
  • ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்
தெலுங்கில் ‘தேவதாஸ்' படத்துக்கு பிறகு ‘நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் படம் ‘ஜெர்சி'. ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை கெளதம் டின்னானுரி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் விக்ரம்.கே.குமார் இயக்கவுள்ளார். இது நானியின் கேரியரில் 24-வது படமாம். இன்னும் பெயரிடப்படாத இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் சித்தார்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்