முகப்புடோலிவுட்

நடிகர் ராணாவின் சகோதரர் மேல் ஸ்ரீரெட்டி புகார் - வெளியான புகைப்பட ஆதாரம்

  | April 12, 2018 12:32 IST
Sri Reddy

துனுக்குகள்

  • நடிக்க வைப்பதாக கூறி பெண்களை மோசம் செய்கிறார்கள் என குற்றச்சாட்டு
  • அரை நிர்வாண போராட்டம் நடத்தி அதிர வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி
  • தெலுங்கு நடிகர் ராணாவின் சகோதரரும் ஏமாற்றியதாக புகார்
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தவர் ஸ்ரீரெட்டி. மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதன் பின் சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தன்னையும், தன்னைப் போன்று தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பப்பட்டு வரும் பெண்களையும் சில திரையுலக பிரபலங்கள் ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்து வருகின்றனர் என சமூக வலைதளங்கள் மூலம் குற்றம் சாட்டினார். அதில் சிலரின் பெயர்கள் வெளியே வர ஆரம்பித்ததும், தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த சிலர் அதிர்ச்சி அடைந்து, ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு ஃபிலிம் சேம்பரில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து, தெலங்கான முதல்வர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் கடந்த சனிக்கிழமையன்று, ஹைதிராபாத் ஃபிலிம் சேம்பர் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த செயல் பெரும் அதிர்ச்சியளிக்க, போலீஸார் இவரைக் கைது செய்து, சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இதன் பிறகு ஸ்ரீரெட்டிக்கு தெலங்கானா, ஆந்திராவில் ஆதரவு பெருகியது. பல்வேறு மகளிர் அமைப்பினர், தெலுங்கு நடிகர், நடிகைகள் எனப் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனிடையே நேற்று பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம், தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, அவரது ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார் ஸ்ரீரெட்டி. இதற்கான சாட்சிகளாக அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டார். மேலும் இதைப் பற்றி தொலைக்காட்சிகளிலும் பேட்டி அளித்தார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்