முகப்புடோலிவுட்

பேட்ட படத்துக்கு வந்திருக்கும் சோதனை!….. ரசிகர்கள் வேதனை!!

  | January 09, 2019 16:01 IST
Petta

துனுக்குகள்

  • நாளை பேட்ட திரைப்படம் வெளியாகிறது
  • அனிரூத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • சன்பிக்சர் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜடன் முதல் முறையாக இணைந்துள்ள  படம் ”பேட்ட”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் ரொமாண்டிக் ஹீரோயினாக நடித்துள்ளார். இது சிம்ரன் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்திருக்கிறார். சன் பிக்சர் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தோடு அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படம் வெளியாகிறது. இந்நிலையில்
 
நாளை  திரைக்கு வரும் இந்தப் படத்துக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் போதிய திரையரங்குகள் கிடைத்தாலும் தெலுங்கில் திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
 
ஜனவரி 10-ம் தேதியில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் முதலில் பேட்ட' படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
 
ஆனால் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் படம் வெளியிடப்படும் என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால், பாலகிருஷ்ணா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களுக்கே சுமார் 90% அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளன.
 
இருப்பினும் பேட்ட படக்குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றே சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் விஸ்வாசம் படக்குழுவினர் தங்களுடைய படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டிலும் கூட பேட்ட படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் போர்கொடி தூக்கி வருகின்றனர்.  அஜித் படம்தான் அதிகமாக வருகிறது என ரஜினி ரசிகர்கள் அஜித் ரசிகர்களை விமர்ச்சித்து வருகிறார்கள்…….


மேலும் படிக்க - “விஸ்வாசம்” படத்திற்கு திடீர் தடை- கொதிக்கும் ரசிகர்கள்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்