விளம்பரம்
முகப்புடோலிவுட்

'F2' ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னா, மெஹ்ரீன்

  | July 11, 2018 13:20 IST
F2 Movie Cast

துனுக்குகள்

  • அணில் ரவிபுடி இயக்கவிருக்கும் புதிய படம் ‘F2’ (Fun & Frustration)
  • ‘விக்டரி’ வெங்கடேஷ், ‘மெகா பிரின்ஸ்’ வருண் தேஜ் இணைந்து நடிக்கின்றனர்
  • சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது

டோவிவுட்டில் ரவி தேஜாவின் ‘ராஜா தி கிரேட்’ படத்திற்கு பிறகு இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கும் புதிய படம் ‘F2’ (Fun & Frustration). டபுள் ஹீரோ சப்ஜெக்டான இதில் ‘விக்டரி’ வெங்கடேஷ், ‘மெகா பிரின்ஸ்’ வருண் தேஜ் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜ்ஜுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடிக்கவிருக்கின்றனர். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகைகள் தமன்னா, மெஹ்ரீன் இருவருமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடிகை மெஹ்ரீனே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்