முகப்புடோலிவுட்

'சைரா நரசிம்ஹா ரெட்டி'யில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை

  | April 12, 2018 10:39 IST
Sye Raa Narasimha Reddy

துனுக்குகள்

  • இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம்
  • படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது
  • இதில் ஹீரோயினாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார்
தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம். மெகா ஸ்டாருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது, இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க தமன்னா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு இசையமைக்க அமித் திரிவேதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் இப்படம் தயாராகுகிறது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்