முகப்புடோலிவுட்

‘காஸி’ இயக்குநரின் அடுத்த படம் எப்போது வெளியீடு?

  | July 13, 2018 14:12 IST
Varun Tej Sankalp Reddy

துனுக்குகள்

  • இப்படத்தின் கதைக்களம் விண்வெளி சம்பந்தப்பட்டதாம்
  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இதில் அதிதி ராவ், லாவண்யா திரிபாதி என 2 ஹீரோயின்ஸாம்
தெலுங்கில் ‘THOLIPREMA’ படத்திற்கு பிறகு ‘மெகா பிரின்ஸ்’ வருண் தேஜ் நடிக்கும் படத்தை ‘காஸி’ பட புகழ் சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். சங்கல்ப் ரெட்டியின் முதல் படமான ‘காஸி’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. வருண் தேஜ் – சங்கல்ப் ரெட்டி கூட்டணி அமைக்கும் படத்தின் கதைக்களம் டோலிவுட் மட்டுமின்றி இந்திய திரையுலகிலையே அதிகம் பரிச்சயம் இல்லாத விண்வெளி சம்பந்தப்பட்டதாம்.

ஆகையால், இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாகவுள்ளது. இதில் அதிதி ராவ் ஹைதரி, லாவண்யா திரிபாதி என 2 ஹீரோயின்ஸாம்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தை இந்தாண்டு (2018) டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்