முகப்புடோலிவுட்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா டூயட் பாடும் ‘கீதா கோவிந்தம்’ ஃபர்ஸ்ட் லுக்

  | June 25, 2018 12:56 IST
Vijay Deverakonda

துனுக்குகள்

  • ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார்
  • இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா நடிக்கவுள்ளார்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்
‘மகாநடி’ (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா கைவசம் ‘டாக்ஸிவாலா, நோட்டா, Dear Comrade’ என மூன்று படங்கள் உள்ளது. இதனையடுத்து ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ பட இயக்குநர் பரசுராம் இயக்கவிருக்கும் ‘கீதா கோவிந்தம்’ எனும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கிறார்.

இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மான்டேனா டூயட் பாடி ஆடவுள்ளார். அனு இம்மானுவேல் கெஸ்ட் ரோலில் வலம் வரவுள்ளாராம். இதனை ‘GA2 பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதற்கு கோபி சுந்தர் இசையமைக்கவுள்ளார்.

தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்