முகப்புடோலிவுட்

‘சைரா நரசிம்ஹா ரெட்டி’யில் விஜய்சேதுபதியின் கேரக்டர் லுக் – வைரலாகும் ஸ்டில்

  | October 11, 2018 13:19 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம்
  • இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா, தமன்னா நடிக்கின்றன
தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம். மெகா ஸ்டாருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.

‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அமித் திரிவேதி இசையமைக்கும் இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதீப்பும், விஜய் சேதுபதியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்