முகப்புடோலிவுட்

என்.டி.ஆரின் பயோ பிக் 2-ஆம் பாகம் எப்போது ரிலீஸ்?

  | October 05, 2018 11:56 IST
Ntr Biopic

துனுக்குகள்

  • பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார்
  • இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம்
  • இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம்
டோலிவுட்டில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடிக்கிறார். முதலில் படத்தை இயக்க கமிட்டான இயக்குநர் தேஜாவிற்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தேஜாவுக்கு பதிலாக க்ரிஷ் இயக்குநராக ஒப்பந்தமானார்.

பாலகிருஷ்ணாவின் 100-வது படமான ‘கௌதமிபுத்ர சாதர்கணி’யை இயக்கியது க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 103-வது படமாம். இதில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

என்.டி.ஆரின் மருமகனும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகுமாம். இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். தற்போது, 2-ஆம் பாகமான 'என்.டி.ஆர் மஹாநாயகுடு'வை வருகிற ஜனவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்