Advertisement
HomeMovie Reviews

தமிழ் சினிமாவில் ஒரு தரமான படம்- கைதி விமர்சனம்! - Kaithi movie review

ஒரு வித்யாசமான முயற்சி! ஆங்கில படத்திற்கு இணையான ஒரு கதைக்களம். விறுவிறுப்பான நகர்வு என படம் என்னற்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.

  | October 26, 2019 08:42 IST

Rating:

தமிழ் சினிமாவில் ஒரு தரமான படம்- கைதி விமர்சனம்! - Kaithi movie review
 • Genre:
  ஆக்ஷன் திரில்லர்
 • Cast:
  கார்த்தி, தீனா, நரேன்
 • Director:
  லோகேஷ் கனகராஜ்
 • Producer:
  எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு
 • Music:
  சாம் சி. எஸ்

நரேன் தலைமையில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல்படை கிலோ கணக்கில் கடத்தப்பட்ட போதைப்பொருட்களை மீட்டு ஒரு இடத்தில் பத்திரப்படுத்துகிறார்கள். இதை எடுக்கும் முயற்சியில் போதை பொருள் விற்கும் கும்பல் முயல்கிறது. அதே சமயம் போதை பொருளை மீட்டெடுத்த காவல்துறை அதிகாரிகளை கொல்லவும் அந்த கும்பல் முயற்சி செய்கிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக இருந்து விட்டு வெளியே வரும் கார்த்தி தன் 10வயது பெண்குழந்தையை தேடிச்செல்கிறார். போகும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றனர். அங்கு போதை பொருள் கும்பலால் நரேனைத் தவிற மற்ற காவலர்கள் உயிருக்கு போராடும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். யாரும் உதவிக்கு இல்லாத சூழலில் கார்தியின் உதவியை நாடுகிறார் நரேன்.

hhcf4ivg

நரேனுக்கு உதவி செய்யும் கார்த்தி அனைத்து காவலர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டு தன் குழந்தையை சந்தித்தாரா? கார்த்தி யார்? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கார்த்தியுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணி உண்மையாகவே வெற்றிக் கூட்டணியாக அமைந்திருக்கிறது. சமீப காலங்களில் வரும் வழக்கமான கார்த்தியை இந்த பாடத்தில் பார்க்க முடியவில்லை. முற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படங்கள் தொய்வை ஏற்படுத்தி இருந்தன தற்போது ‘கைதி’ படம் கார்த்திக்கு மட்டுமல்ல கார்த்தியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

ரிலீஸ் ஆன ஆயுள் தண்டனைக்கைதியாக கார்த்தி நடித்துள்ளார். நெற்றியில் பட்டையும் சாதாரன வேட்டியும், முதிர்ச்சியும் கார்த்திக்கு கனக்கச்சிதமாக பொருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் கார்த்தி எதிரிகளை எதிர்கொள்ளும் போது ஆவேசமாகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியின் கதாபாத்திரத்தை உணர்ந்து முதிர்ச்சியை வெளிபடுத்தி பாராட்டுகளை அல்லுகிறார். படத்தின் முதல் பாதியிலே பார்வையாளர்களை கதைக்குள் கடத்தி விடுகிறார் இயக்குநர்.

ti1964c8

படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சண்டை காட்சியில் மட்டும் கார்த்தியின் கதாபாத்திர சித்தரிப்பு செயற்கைதனமாக இருந்தது. கடவுள் நம்பிக்கைக்கு அழுத்தமான ஒரு வசனம் தேவையில்லாது. பல கத்தி குத்துக்கு பிறகும் எப்படி சண்டை போட முடியும்?, குத்து பட்டவரை எழுப்ப தீனா தொடர்ந்து ‘அண்ணே உன் பொண்ணுக்கு கொடுத்த ஜிமிக்கியை தூக்கி போட்டுட்டாங்க, உடச்சிட்டாங்கனு” செல்லி எழுப்புறது வழக்கமான சினிமா தனத்தை காட்டியது.

படத்தில் கதாநாயகி இல்லை என்கிற கவலை எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு கதைகளத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். நாயகனை மய்யப்படுத்திய படமாக இருந்தாலும் இப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் . அந்த வகையில் வட்சன் சக்ரவர்த்தி, ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, உள்ளிட்ட அத்துனைபேரும் கவனித்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

கார்த்தியின் நடிப்பும் துடிப்பும் கதையை தாங்கி பிடிக்கிறது. படத்தின் மற்ற இரண்டு தூண்களாக இசை அமைப்பாளர் சாம் சி.எஸ்-ம், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனும் இருக்கிறார்கள். இன்னும் அழுத்தமாக செல்ல வேண்டுமென்றால் இவர்களோடு சேர்த்து படத்தில் நான்கு கதாநயகர்கள் என்று சொல்லாம்.

rf22cvho

ஒரு இரவில் என்ன செய்திட முடியும், படம் முழுவதும் இருட்டு சூழ்ந்திருந்தாலும் பிரகாசிக்கிறது கதைக்களம். அன்பு, காதல், நட்பு, போன்ற உணர்வுகளை போகிற போக்கில் அழுத்தமாக கடத்திவிட்டு அடுத்த ஆட்டத்தை தொடங்குகிறது கதை. படத்தின் இறுதி காட்சி தீபாவளி கொண்டாடி இருக்கிறது.

ஒரு வித்யாசமான முயற்சி! ஆங்கில படத்திற்கு இணையான ஒரு கதைக்களம். விறுவிறுப்பான நகர்வு என படம் என்னற்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. அடுத்த என்ன நடக்கும் என்கிற கேள்வியை எழுப்பி கதைக்குள் கட்டிவைக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் கைதி படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பு

Advertisement
Advertisement
Listen to the latest songs, only on JioSaavn.com