முகப்புபாலிவுட்

நடுரோட்டில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை

  | February 01, 2019 11:49 IST
Shamita Shetty

துனுக்குகள்

  • மாதவன் உடன் நாள் அவள் அது திரைப்படத்தில் நடித்தவர்
  • விஜயகாந்துடன் ராஜ்ஜியம் படத்திலும் நடித்திருக்கிறார்
  • தற்போது தி டெனண்ட் படத்தில் நடித்து வருகிறார்
தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான  “நான் அவள் அது” , விஜயகாந்த் நடித்த “ராஜ்ஜியம்” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை  ஷமிதா ஷெட்டி.  தமிழில் அவர் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாலிவுட்டிற்கு சென்று விட்டார்.
 
தற்போது இவர் ‘தி டெனணட்' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்களன்று மும்பையை அடுத்த  தானே பகுதியில் தான் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் தன்னுடைய காரின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனை தட்டிக் கேட்ட தனது டிரைவரை தாக்கி, தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
 
அந்த சம்பவத்தின் போதும் அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் தன்னை காப்பாற்றியதாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
 
நடிகை ஷமிதா ஷெட்டியும் அவருடைய டிரைவரும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகின்றன.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்