முகப்புபாலிவுட்

“ஆமா, நான் தான் கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறேன்” உறுதி செய்த பாலிவுட் நடிகர்..!

  | February 29, 2020 10:32 IST
Hindi Remake Of Karthi

துனுக்குகள்

  • கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
  • ஹிந்தியில் கார்த்தி கதாப்பத்திரத்தி அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார்.
  • கைதி ஹிந்தி ரீமேக் 2021 பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துக் கடந்த ஆண்டு அக்டோபர் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘கைதி'. இப்படத்தை றீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரித்தார். விஜயின் ‘பிகில்' திரைப்படத்துக்கே டஃப் கொடுத்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்றது. அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எல்லோரையும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் சிறப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.

இப்படத்தைப் பாலிவுட்டில் ரீமேக் செய்யத் திட்டமிடப்பட்டதையடுத்து, இதில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் அல்லது ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாகப் பேசப்பட்டுவந்தது. 

இந்நிலையில், இன்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆம், நான் கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படம் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்-உடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. 


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்