முகப்புபாலிவுட்

அக்‌ஷய் குமார் மீண்டும் ரூ. 2 கோடி நன்கொடை..!

  | April 28, 2020 14:27 IST
Akshay Kumar Donates

முன்னதாக அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரன நிதிக்கு (PMCARES) ரூ. 25 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடியும் நன்கொடை அளித்துள்ளார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ. 2 கோடி நன்கொடை அளித்து தனது பெருந்தன்மையை மீண்டும் நிரூபித்துள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள ஒரு முக்கியமான நேரத்தில், தலைமை கான்ஸ்டபிள்களான சந்திரகாந்த் பெண்டுர்கர் மற்றும் சந்தீப் சர்வே ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து அக்‌ஷய் இந்த நன்கொடையை அளித்துள்ளார்.

மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ. 2 கோடி பங்களித்தமைக்கு மும்பை காவல்துறை அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

அவர்களின் ட்வீட்டுக்கு பதிலளித்த அக்‌ஷய், “கொரோனாவை எதிர்த்து உயிரை மாய்த்துக் கொண்ட மும்பைபோலிஸ் ஹெட் கான்ஸ்டபிள்ஸ் சந்திரகாந்த் பெண்டுர்கர் & சந்தீப் சர்வே ஆகியோருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் என் கடமையைச் செய்துள்ளேன், நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் காரணமாக நாங்கள் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதை மறந்து விடக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரன நிதிக்கு (PMCARES) ரூ. 25 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடியும் நன்கொடை அளித்துள்ளார்..

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com