முகப்புபாலிவுட்

அமேசான் காட்டு தீ நம்மில் ஒருவரையும் பாதிக்கும் அக்ஷய் குமார் வருத்தம்!

  | August 23, 2019 18:37 IST
Akshay Kumar

துனுக்குகள்

  • மிஷின் மங்கள் படத்தில் விஞ்ஞாணியாக நடித்துள்ளார் இவர்
  • லக்ஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • அமேசான் காடு எரிவது குறித்து கருத்து கூறியுள்ளார்
உலகின் 20 சதவீதம் ஆக்ஸிஜனை அளிப்பது அமேசான் காடுகள், ஆகவேதான் அதை உலகின் நுரையீரல் என்று குறிப்பிடுகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 15 க்கு பிறகு மட்டும் 9,000க்கும் அதிகமான தீ விபத்துகள் அங்கு ஏற்பட்டுள்ளன. பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்  என்பதற்காக பிரேசில் அரசு கடந்த முப்பது ஆண்டுகளில் அதிகமான மழைக்காடுகளை அழித்து வருகிறது. இதனை எதிர்த்து அங்குள்ள பூர்வகுடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக கடுமையான காட்டுத்தீ, வனப்பகுதி முழுவதையும் அழித்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள் பலரும் இந்நிகழ்வை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த காட்டு தீ விபத்திற்கு பின் மிகப்பெரிய கார்பரேட் அரசியல் இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ட்விட்டரில் பலரும் பிரே ஃபார் அமேசான், சேவ் அமேசான் என்று ஹேஸ்டேகை பகிர்ந்து வருகின்றனர்.
 
உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் இந்த காட்டு தீ குறித்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார், “2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது. இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை உலகிற்க வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்