முகப்புபாலிவுட்

இந்திய அரசின் மிக உயரிய விருதான தாதா சாகேப் விருதை பெறும் அமிதாப் பச்சன்!

  | September 25, 2019 12:14 IST
Amitab Bachchan

திரைத்துறையிலேயே மிக உயரிய விருதான மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதை வித்துள்ளது

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி இந்திய அரசு கெளரவிப்பு.
இந்தி திரையுலகில் சுமார் மூன்று தலைமுறை ரசிகர்களின் ஆதரவைப்பெற்ற சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இன்றும் பாலிவுட்டில் இவருடைய படங்களுக்கு வரவேற்பு அதிகம். இவருடைய வயதுதான் அதிகமே தவிற இவருடைய படங்கள் எப்போதும் 16 என்பது போலதான் ரசிகர்கள் கொண்டாடுவாத்கள். 

சினமாதுறையில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தனி சாம்ராஜ்யத்தையே கட்டி அமைத்திருக்கும் அமிதாப் ஒரு பின்னணி இசை பாடகரும் ஆவார். இவருடைய திறமையையும் , அயராத உழைப்பையும் பாரட்டி மாநில அரசு இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது.

மேலும் மத்திய அரசிடம் மிக உயரிய விருதுகளான
பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தற்போது மத்திய அரசு திரைத்துறையிலேயே மிக உயரிய விருதான மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்து கெளரவப்படுத்தியுள்ளது இந்த அறிவிப்பால் அமிதாப் பச்சம் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com