முகப்புபாலிவுட்

மொத்த சொத்தையும் இரண்டாக பிரிக்க அமிதாப் பச்சன் முடிவு!

  | August 30, 2019 10:51 IST
Amitabh Bachchan

துனுக்குகள்

  • அமிதாப் பச்சனின் மொத்த சொத்து 2,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
  • அமிதாப் பச்சனுக்கு அபிஷேக் மற்றும் சுவேதா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்
  • பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் அமிதாப் பச்சன்
மூத்த நடிகரும் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது சொத்துகளை மகன், மகள் இருவருக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
 
அமிதாப் பச்சனுக்கு, மகன் அபிஷேக் மகள் சுவேதா என இருவர் உள்ளார். இவர் தொழில் அதிபர் நிகில் நந்தாவை திருமணம் செய்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு தற்போது  76 வயதாகிறது. இவருக்கும் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 800 கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதாக அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
 
பாலின சமத்துவத்தை பற்றி தொடர்ச்து பேசி வரும் அமிதாப்பச்சனின் இந்த அறிவிப்பும் ஆண், பெண் சமத்துவத்தை சார்ந்தே இருக்கிறது. 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘பேடி பச்சாவ், பேடி படாவ்' (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்) என்ற பிரசார இயக்கத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். மேலும் பெண் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.சபை தூதராகவும் அவர் செயல்படுகிறார்.
 
அமிதாப் பச்சன் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது என்று கூறினார். மேலும் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமாக சொத்துகளை பிரித்து கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ஒரு தடவை தனது வலைத்தள பக்கத்தில், ‘நான் இறக்கும்போது, எனது சொத்துகளை மகன், மகளுக்கு சமமாக விட்டு செல்வேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்